பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் தலைவர் முருக பிள்ளை கோபாலகிருஷ்ணன் தலைமையில் 22வது சைவ மகாநாடு ஜுன் 18 ம் 19ம் திகதிகளில் லண்டனில் நடைபெற உள்ளது.இந்த மகாநாட்டில் சிவாச்சாரியர்கள் உயர் சைவ மத தலைவர்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்வு சிறப்புற அமைய இலங்கை மலையக சைவ திருப்பணிகள் ஒன்றியத்தின் தலைவர் அம்மாசி நல்லுசாமி ஏற்பாட்டில் லிப்பக்கலையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.
இதன்போது அறநெறி பாடசாலை ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றன. அதேவேளை சமைய சொற்பொழிவும் சைவ மாநாடு வெற்றி பெற ஆசி உரைகளும் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டன.
சைவ மாநாடு வெற்றி பெற வேண்டி சிதறு தேங்காயும் உடைக்கப்பட்டது.
அதிபர் ஆசிரியர்கள் சிறுவர்கள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் தோட்டத் தலைவர்கள் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
மலைவாஞ்ஞன்