24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 7 இளைஞர்களும், இரு யுவதிகளும்..

0
154

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இளைஞர் அணியின் அனுசரனையில் இடைவிடாது தொடர்ச்சியாக 24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனை புத்தகத்தில் மலையக பெருந்தோட்ட சமூகத்தை சார்ந்த 7 இளைஞர்களும், இரு யுவதிகள் இடம்பிடித்துள்ளனர்.

லிந்துலை,மெரேயா,அக்கரபத்தனை, டயகம ஹப்புத்தளை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறித்த இளைஞர், யுவதிகள் 16 முதல் 26 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் ஹட்டன் பகுதியில் உள்ள நடன பயிற்சி நிலையமொன்றில் பயிற்சி பெற்றவர்கள் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீநாகவானி ராஜாவின் மேற்பார்வையில் ஆகஸ்ட் 30 ஆம் திகதி காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி காலை 8 மணிவரை குறித்த இளைஞர்கள் தொடர்ச்சியாக நடனமாடியுள்ளனர். ஹட்டன், டன்பார் மைதானத்தில் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது.

நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர், யுவதிகள் கட்டங்கட்டமாக ஓய்வெடுக்கவும், உணவு உண்ணவும் சிறிது நேரம் அனுமதி வழங்குவதற்கு சோழன் மேற்பார்வைக் குழுவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். குறித்த இளைஞர், யுவதிகளின் சாதனை ஆட்டத்தை கண்டுகளிக்க பெருமளவானோர் வருகை தந்திருந்தனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here