அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற இந்தப் இறுதி போட்டியில் 6-3, 7-6 (5), 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டியில் மேத்வதேவை வீழ்த்தி ஜோகோவிச் 24வது முறையாக கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்ஸ் பட்டத்தை கைப்பற்றினர்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற இந்தப் இறுதி போட்டியில் 6-3, 7-6 (5), 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
பட்டம் வென்றதும் உடனடியாக தான் அணிந்திருந்த ஜெர்ஸியை மாற்றி கடந்த 2020 இல் உயிரிழந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் பிரையன்ட்டுக்கு (Kobe Bryant) ஜோகோவிச் அஞ்சலி செலுத்தினார்.
நடப்பு ஆண்டில் அவுஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் என மூன்று கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை ஜோகோவிச் கைப்பற்றியுள்ளார்.