2400 கிராம அலுவலகர்களுக்கு நாடளாவிய ரீதியில் வெற்றிடங்கள்

0
227

புதிய நபர்களை விரைவில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். நாடாளாவிய ரீதியில் 2400 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த வெற்றிடங்களை தகுதியானவர்களை விரைவில் சேவையில் இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்தி, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்கல் கிராம சேவை மட்டத்திலேயே மேற்றக்கொள்ளப்படுவதன் காரணமாக கிராம உத்தியோகத்தர்கள் மிக முக்கியமான அரச அதிகாரிகளாக காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடங்கள் காணப்படுகின்றமை அனைத்து விதமான அபிவிருத்தி செயற்பாடுகளிலும் தாக்கம் செலுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, புதிய நபர்களை விரைவில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அவ்வாறல்லாத பட்சத்தில் கிராம உத்தியோகத்தராக செயற்பட விரும்பும் அரச அதிகாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here