25 ஆண்டுகளாக தலைமறைவான பொருளாதார குற்றவாளி நாடு கடத்தல்!

0
11

இறக்​கும​தி-ஏற்​றுமதி மோசடி​யில் குற்​றம் சாட்​டப்​பட்டு 25 ஆண்​டு​கள் அமெரிக்​கா​வில் தலைமறை​வாக இருந்த பொருளா​தார குற்​ற​வாளி மோனிகா கபூர் இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தப்​பட்​டார். இதற்​கான அனு​ம​தியை நியூ​யார்க் நகர நீதி​மன்றம் வழங்​கியது. இதையடுத்​து, அவரை சிபிஐ காவலில் எடுக்க உள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

‘‘மோனிகா ஓவர்​சீஸ்’’ என்ற நிறு​வனத்​தின் உரிமை​யாளர் மோனிகா கபூர். இவர் தனது இரண்டு சகோதரர்​களான ராஜன் கன்னா மற்​றும் ராஜீவ் கன்​னா​வுடன் சேர்ந்து நகை வணி​கத்​திற்​கான வங்கி போலி ஆவணங்​களை தயார் செய்து வரி இல்​லாமல் மூலப் பொருட்​களை இறக்​குமதி செய்ய அரசிட​மிருந்து உரிமங்​களைப் பெற்​றார். இதன் மூலம் அவர் ரூ.2.36 கோடி மதிப்​புள்ள தங்​கத்தை இறக்​குமதி செய்​தனர்.

அதன்​பின்​னர் இந்த உரிமங்​களைஅகம​தா​பாத்தை சேர்ந்த டீப் எக்​ஸ்​போர்ட்ஸ் நிறு​வனத்​திடம் அதிக விலைக்கு விற்​றுள்​ளனர். அந்த நிறு​வனம் இந்த அரசின் உரிமத்தை பயன்​படுத்தி வரி இல்​லாத தங்​கத்தை கோடிக்​கணக்​கில் இறக்​குமதி செய்​தது. இந்த மோசடி​யால் இந்​திய கரு​வூலத்​திற்கு 6,79,000 அமெரிக்க டாலர்​களுக்​கும் அதி​க​மான இழப்பு ஏற்​பட்​டது.

இதையடுத்து சிபிஐ விசா​ரணை நடத்தி கடந்த 2004-ம் ஆண்டு மோனிகா கபூர் மற்​றும் அவரது சகோதரர்​கள் ராஜன் மற்​றும் ராஜீவ் மீது குற்​றப்​பத்​திரி​கையை தாக்​கல் செய்​தது. இந்த நிலை​யில் முக்​கிய குற்​ற​வாளி​யான மோனிகா கபூர் கடந்த 1999-ம் ஆண்டு அமெரிக்கா​வுக்கு தப்​பிச் சென்​று​விட்​டார்.

இதனால், அவர் 2006-ம் ஆண்டு தேடப்​படும் குற்​ற​வாளி​யாக அறிவிக்​கப்​பட்​டார். 2010-ம் ஆண்டு அவருக்கு எதி​ராக ரெட் கார்​னர் நோட்​டீஸ் பிறப்​பிக்​கப்​பட்​டது. அவரை அமெரிக்​கா​வில் இருந்து நாடு கடத்த சிபிஐ அதி​காரி​கள் முயற்சி எடுத்து வந்​தனர்.

இதனிடையே ராஜன் மற்​றும் ராஜீவ் ஆகியோரை கடந்த 2017-ம் ஆண்டு நீதி​மன்​றம் குற்​ற​வாளி​களாக அறி​வித்​தது. இந்தியாவுக்கும் அமெரிக்கா​வுக்​கும் இடையே இருதரப்பு குற்​ற​வாளி​கள் ஒப்​படைப்பு ஒப்​பந்​தத்​தின் கீழ் நியூ​யார்க்​கின் கிழக்கு மாவட்​டத்​திற்​கான அமெரிக்க மாவட்ட நீதி​மன்​றம் மோனிகா கபூரை நாடு கடத்த அனு​மதி அளித்​தது. இதையடுத்து அவரை சிபிஐ காவலில் எடுத்து வி​சா​ரணையை தொடர உள்​ள​தாக அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here