25 வருடங்கள் செயற்பட்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மூடப்பட்டது!

0
9

பாகிஸ்தானில் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகத்தை மூட அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

25 ஆண்டுகளாக அந்நாட்டில் செயற்பட்டு வந்த குறித்த நிறுவனமே இவ்வாறு மூடப்படுகிறது.

தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தனது பணியாளர்களைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் உள்ள தனது அலுவலகத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, கடந்த வியாழக்கிழமை முதல் பாகிஸ்தானில் உள்ள அலுவலகத்தை மூட அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேநேரம் 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு 9,000 ஊழியர்களைக் கொண்ட மிகப்பெரிய பணியாளர் குறைப்புக்கு பின்னர் தற்போது அந்த நிறுவனத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளபப்டுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானின் முன்னாள் தலைவர் ஜவாத் ரெஹ்மான், தனது பதிவொன்றில் நாணய மதிப்புக் குறைப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடு சரிவு உள்ளிட்ட நாட்டின் பொருளாதார உறுதியற்ற தன்மையே இந்த நடவடிக்கைக்குக் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பாகிஸ்தானில் உள்ள அதன் அலுவலகம் மூடப்பட்ட போதிலும், பாகிஸ்தானுக்கு அருகிலுள்ள நாடுகளில் அமைந்துள்ள பிற மைக்ரோசாஃப்ட் அலுவலகங்கள் மூலம் பாகிஸ்தான் வாடிக்கையாளர்களுக்கு தனது சேவைகளை வழங்குவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்தத் திட்டம் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதால், அதன் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து உயர் மட்ட சேவையை வழங்க எதிர்பார்க்கிறார்கள் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here