3 ஆயிரம் லிட்டர் மது; கால்வாயில் கொட்டிய தாலிபான்! – கதறும் மதுப்பிரியர்கள்!

0
195

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியமைத்துள்ள நிலையில் பதுக்கப்பட்ட மதுவை கால்வாயில் கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் தாலிபான் அமைப்பு ஆட்சியை பிடித்தது. ஆட்சியை பிடித்தது முதலாக அனைத்து துறைகளிலும், செயல்பாடுகளிலும் கடும் கட்டுப்பாடுகளை தாலிபான் விதித்து வருகிறது.

அதன்படி ஆப்கானிஸ்தானில் மது மற்றும் போதைப்பொருட்களுக்கு தாலிபான் தடை விதித்துள்ளது. ஆனால் அதை மீறி சட்டத்திற்கு புறம்பாக பல பகுதிகளில் மதுவிற்பனை நடந்து வந்த நிலையில் தாலிபான் ரெய்டில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நடத்தப்பட்ட ரெய்டில் பதுக்கப்பட்ட 3 ஆயிரம் லிட்டர் மதுவை கண்டுபிடித்த தாலிபான்கள் அதை கால்வாயில் கொட்டியுள்ளனர். இது ஆப்கன் மதுப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here