தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாக்டிகா மாகாணம் அர்குன், பர்மல் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர்.
இதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியம் கூறும் போது, பாகிஸ்தானின் இந்த கோழைத்தனமான தாக்குதலில் துணிச்சலான கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த துயர சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ள முத்தரப்பு 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி விலக முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தது.