3 பாடசாலைகளுக்கு நாளை பூட்டு

0
159

கடும் மழை காரணமாக ஹல்துமுல்ல கொஸ்லந்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால், மிரியபெத்த, மகல்தெனிய, ஆர்னோல்ட் ஆகிய மூன்று பாடசாலைகளும் நாளை (16) திங்கட்கிழமை மூடப்படுவதாக ஹல்துமுல்ல கோட்ட கல்விப் பணிப்பாளர் திருமதி நிலானி தம்மிக்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அந்த பாடசாலைகளில் குறைவான மாணவர்கள் இருப்பதால், அந்த மாணவர்களை அருகில் உள்ள வேறு பாடசாலைகளுக்கு வரவழைத்து நாளை (16)கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

அனர்த்த முகாம்களில் இயங்கும் பாடசாலைகளில் இடையூறு இன்றி கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்வதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here