சம்பாதித்த பிறகும் தனது அணுகுமுறையை அவர் மாற்றிக் கொள்ளவில்லை என வாசிம் ஜாபர் புகழாரம்.கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் தோனி நேற்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தன் மனைவியிடம் தோனி அவரது எதிர்காலம் குறித்து பகிர்ந்ததை பதிவிட்டிருக்கிறார்.
அவர் கூறுகையில், “2005 ஆம் ஆண்டு நான் இந்திய அணிக்குத் திரும்பினேன். 2004 ஆம் ஆண்டின் இறுதியில் தோனி ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக அணிக்கு புதிதாக வந்திருந்தார்.
நான், என் மனைவி, தினேஷ் கார்த்திக் மற்றும் அவரின் மனைவி, தோனி
அப்போது என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்த தோனி, ‘ நான் 30 லட்சம் சம்பாதிக்க விரும்புகிறேன். அந்தப் பணம் இருந்தால் என்னுடைய வாழ்க்கையை ராஞ்சியில் நிம்மதியாக வாழ முடியும்’ என்று கூறினார். அவர் நிறைய சாதித்து, சம்பாதித்த பிறகும் தனது அணுகுமுறையை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. இன்னும் அதே பணிவுடன்தான் இருக்கிறார்” என கூறியுள்ளார்.
தோனியின் சொத்து மதிப்பு 1000 கோடி ரூபாய் அளவில் இருக்கும் என அண்மையில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.