30 வருடகாலமாக குன்றும் குழியுமாக காணபப்ட்ட பாதை காபட் இட்டு புனரமைப்பு

0
181

டயகம சந்திரகாமம் பாதை கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மிகவும் மோசமான நிலையில் குன்றும் குழியுமாக காணப்பட்டது.குறித்த பாதையினை சுமார் 450 லட்சம் ரூபா செலவில் காபட்யிட்டு புனரமைக்கப்பட்டதனையிட்டு பொது அரசாங்கத்திற்கு ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் நன்றி தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் இந்த பாதையினூடாக ஒருவர் நடந்து கூட செல்ல முடியாத நிலைமையே காணப்பட்டன.

யரவல, சந்திரகாமம், பொயிஸ்லேண்ட், மெனிக்பாம் கால்நடை வளர்ப்பு பண்ணை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு செல்லும் பிரதான பாதையாக குறித்த பாதை காணப்பட்டது. இந்த பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர்.பாதை மோசமான இருந்ததன் காரணமாக அவசரத்திற்கு ஒரு நோயாளியை கூட கொண்டு செல்ல முடியாது மக்கள் பெரும் கஸ்ட்டங்களை எதிர்நோக்கினர்.கூலி வாகனங்களுக்கு அதிக பணம் செலவிட வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலையே காணப்பட்டதாகவும் கடந்த காலங்களில் பல அரசியல் தலைவர்கள் இந்த பாதையினை வைத்து அரசியல் செய்ததாகவும், பாதையினை காபட் இடுவதாக சொல்லி கற்களை கொண்டு வந்து கொட்டி அடிக்கல் நாட்டிவிட்டு 3 வாரங்களின் பின் அதனை மீண்டும் எடுத்துச்சென்றதாகவும், இந்நிலையில் ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்த பின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் ஒரு கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைச்சர் ஜோன்ஸ் பர்னான்டோ அவர்களின் வழிகாட்டலில் குறித்த பாதையின் 3 கிலோற்றர் தூரம் காபட் இட்டு செப்பனிடப்பட்டுள்ளதாகவும் இது குறித்த அரசாங்கத்திற்கும் அமைச்சர் ஜீவன் தொண்டமாக் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவு பொது மக்கள் தெரிவித்தனர்.

சந்திரகாமம் பாதை தொடர்பாக பல தடைவைகள் ஊடகங்களினூடக எடுத்துக்காட்டப்பட்டன. இந்த பாதையில் பாரிய கற்கள் தோன்றி குன்றும் குழியுமாக காணப்பட்டதன் காரணமாக வாகனங்கள் செல்ல் மிகவும் சிரமம் ஏற்பட்டன.
அவசரத்திற்கு முச்சக்கரவண்டி ஒன்றினை பெற்றுக்கொள்ள கூட முடியாத நிலை காணப்பட்டது.அவ்வாறே வந்தாலும் கூட பாதை மோசமாக இருந்ததனால் அவர்கள் சாதரண கட்டணத்தினை விட அதிக கட்டணம் அறவிட்டே வந்தனர் இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத ஒரு நிலையே காணப்பட்டன

இந்த பிரதேசத்தில் விவசாயத்தில் ஈடுப்படுபவர்கள் தங்களது உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு செல்லவும் உற்பத்திக்கு தேவையான உரம் மற்றும் மருந்து உள்ளிட்ட பொருட்களை கொண்டு வருவதற்கும் பாரிய பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டன.இதனால் இந்த பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். இந்நிலையில் ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் வேண்டு கோளுக்கு அமைய சுமார் 450 லட்சம் ரூபா செலவில் குறித்த பாதை காபட் இட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

கே.சுந்தரலிங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here