சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 1.1 பில்லியன் ரூபா மதிப்புள்ள 35 கிலோகிராம் தங்கத்துடன் ஒரு நபர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் வாகன உதிரி பாகங்களைப் போன்ற ஒன்பது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சாதனங்களிலும், சந்தேக நபரின் பயணப் பையிலும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய தொழிலதிபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நேற்று காலை 8:40 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரிடம் 195 தங்க பிஸ்கட்களும், 13 கிலோ தங்க நகைகளும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் குறித்து விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்ை