35,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு எலுமிச்சம்பழம்!

0
190

தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் தனியார் கோயில் ஒன்றில் ஒரு எலுமிச்சம்பழம் 35,000 ருபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகா சிவராத்திரயின் போது சிவபுரி கிராமத்துக்கு அருகே பழம் பூசைய்யன் கோயிலில் அந்த எலுமிச்சை உள்ளிட்ட மேலும் சில பொருள்கள் சிவனுக்கு படைக்கப்பட்டது.இந்நிலையில், கோவிலில் படைக்கப்பட்ட பொருட்ள் எலம் விடப்பட்டுள்ளது.

குறித்த ஏலத்தில் சுமார் 15 பக்தர்கள் கலந்துகொண்டனர். கடைசியில் ஈரோட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் எலுமிச்சையை ஏலத்தில் எடுத்துள்ளார்.

ஏலத்தில் வெற்றிபெறுபவர் செல்வச் செழிப்புடன் வாழ்வார் என்பது அந்தக் கிராம மக்களின் நம்பிக்கையாக காணப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here