36வது சமுர்த்தி வங்கி அக்கரபத்தனையில் திறப்பு!

0
185

மாவட்ட் சமுர்த்தி பணிப்பாளர், மற்றும் நுவரெலியா மாவட்ட பிரதேச செயலாளர் தலைமையில் லிந்துலை சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி தாரணி மகேந்திரன் பங்களிப்புடன் இன்றைய தினம்(22) அக்கரப்பதனை நகரில் திறந்து வைக்கப்பட்டது.

அதிகளவான சமூர்த்தி பயனாளிகள் காணப்படுகின்ற இப்பகுதியில் சிறந்த சமூர்த்தி பணிகளை முன்னெடுக்க முடியும் என்றும் இவ் சமூர்த்தி வங்கியின் உடாக அக்கரப்பதனை பிரதேச சபைக்கு உட்பட்ட 10 கிரமசேவர் பிரிவுகளை சேர்ந்த ( பெல்மோரல்-டயகம) சமூர்த்தி பனாளிகள் மற்றும் ஏனைய பனாளிகளும் பயன்பெற கூடிய வகையில் அக்கரப்பதனை நகரில் திறக்கபட்டுள்ளதாக லிந்துலைசமூர்த்தி முகாமையாளர் உறையாற்றினார்.

மேலும் நுவரெலியா மாவட்ட சமூர்த்தி பணிப்பாளரின் உறையின் போது இப்பகுதியில் வாழும் சகலரினதும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு புதிய வங்கிக்கிளை திறந்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நுவரெலியா பிரதேச இணைப்பு செயலாளர் உறையின் போது சமூர்த்தி பயனாளிகளின் வசதிகளை கருத்தில்கொண்டு பொது மக்களுக்கு தேவையான சகல வசதிகளையும் சிரமமின்றி பெற்றுகொள்ளவேண்டும்,நாட்டின் அபிவிருத்தியில் பொதுமக்கள் பங்களிப்பு மிக முக்கியமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி பயனாளிகள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பா.பாலேந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here