பூண்டுலோயா பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பழையத்தோட்டம் பகுதியில் 38 வயதுடைய பெண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று 29/06/2021 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் படுகொலை செய்யப்பட்டு துணியால் சுற்றி குறித்த பெண்ணின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதோடு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சம்பவத்தை இனங்கண்டு பூண்டுலோயா பொலிஸ்நிலையத்துக்கு அறிவிக்க பூண்டுலோயா பொலிசார் குறித்த இடத்திற்கு விரைந்ததோடு சந்தேசகத்தின் பேரில் 23 வயதுடைய இளைஞரொருவரை கைது செய்துள்ளனர்.
மேலும் மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
நீலமேகம் பிரசாந்த்,க.கிஷாந்தன்