பலாங்கொடை, நன்பேரியல் வனப் பகுதியில் கடந்த 12ஆம் திகதி ஏற்பட்ட காட்டுத் தீ இன்று (15) நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
இதினிமித்தம் நேற்று மாலை வரையில் சுமார் 1000 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸார் மற்றும் அப் பகுதி மக்கள் ஆகியோர் இணைந்து தீயினை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.