கொழும்பு, புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 40 இலட்சம் ரூபாவுக்கு அதிக பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஆடை வியாபாரி ஒருவர் நேற்று புதன்கிழமை (01) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
புறக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஆடை களஞ்சியசாலை ஒன்றில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வத்தளை ஹுனுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து 20,448 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விற்பனை செய்வதற்கும், கொழும்பை சுற்றியுள்ள களியாட்ட விடுதிகளுக்கு விநியோகம் செய்வதற்கும் சந்தேக நபர் இந்த போதை மாத்திரைகளை வைத்திருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.