கடந்த ஒன்றரை மாத்திற்கும் மேலாக நாட்டில் பால் தட்டுப்பாடு நிலவி வருகிறது இந்நிலையில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.பிள்ளைகளுக்கு பால் இன்றி தாய்மார்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.ஹோட்டல்களில் பால் தட்டுப்பாடு காரணமாக வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் சுமார் 400 கிராம் பால்மாவுக்கு பால் இறக்குமதியாளர்கள் 100 வினால் விலை உயர்த்தியுள்ளது மிக பெரிய அநீதி என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்று மக்கள் வேலையின்றி பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் பல அத்தியவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக மக்கள் மேலும் மேலும் துன்பத்திற்குள்ளாகியுள்ளன இவ்வாறான ஒரு சூழ் நிலையில் மக்களுக்கு இன்று அத்தியவசிய பொருளாக உள்ள பால்மாவினை அதிக விலையில் உயர்த்தியிருப்பது தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார சுமை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேலாக பால் இன்றி மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.பலர் பால்மாவினை தேடி கடையாக அளைந்து திரிகின்றனர் பிள்ளைகள் பால் இன்றி தவிக்கின்றனர் இந்நிலையில் பால்மா விலையினை அதிகரித்தும் கூட பால்மா கிடைப்பதில்லை அதிகமானவர்கள் சிறிய சம்பளத்திற்கு இன்று பணி புரிகின்றனர் இந்நிலையில் அதிக விலையில் அதிகரித்திருப்பது தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார சுமை என தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் பால் தட்டுப்பாடு காரணமாக எங்களுடைய வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன அதிகமானவர்கள் டி குடிப்பதற்காகவே கடைகளுக்கு வருகை தருகின்றனர்.
இந்நிலையில் 100 ரூபா 200 வென பால்மாயின் விலையினை அதிகரித்தால் எவ்வாறு நாங்கள் வடிக்கையாளர்களுக்கு விப்பது டியினை 50 ரூபாவுக்கு கொடுக்க முடியுமா இதனால் எங்கள் வியாபாரமே பாதிக்கின்றன.
இது குறித்த தொழிலாளி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் காலையில் வேலைக்கு செல்வதற்கு முன் டி ஒன்று குடித்து விட்டு செல்வோம் ஆனால் இன்று பால் இல்லாததன் காரணமாக டி இல்லை தேநீரை குடித்து சென்றால் எங்களால் வேலையில் ஈடுபடுவது கஸ்;;ட்டமாக இருக்கிறது.வேலை செய்யும் போது மயக்கம் ஏற்படுகிறது.எங்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் உயர்த்தியதாக கூறிய போதிலும் முழுமையாக கிடைப்பதில்லை 14 நாட்டகள் வேலை செய்தும் எல்லாமே வெட்டி விட்டு 1200 தான் சம்பளமாக கிடைத்துள்ளது இதனை வைத்துக்கொண்டு நாங்கள் எவ்வாறு உயிர் வாழ்வது இன்று சோற்றுக்கு பதிலாக பால்வினை குத்துவிட்டு வேலை செய்து வந்த மக்கள் இன்று பால்மா உயர்வின் காரணமாக பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறோம்.தோட்டங்களில் பால்மா இன்றி பெரிதும் அவதிப்படுகின்றனர்.
எனவே விலையுயர்களை மேற்கொள்ளும் அனைத்து மக்களையும் கருத்தில் கொண்டு பொறுப்பு வாய்ந்தவர்கள் செயப்பட வேண்டும் அதற்காகத்தேனா மக்கள் அரசாங்த்தினை அமைத்துள்ளனர் இவ்வாறு விலையுர்வுகள் மேற்கொள்ளும் போது மக்களை கருத்தில் கொள்ளாது அவரவர் விலையுர்கள் மேற்கொள்வார்கள் ஆனால் அரசாங்கம் ஒன்று எதற்கு எனவே அதிகரித்த அத்தியவசிய பொருட்களின் விலையினை மறுமுறை பரிசீலனை செயப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுகின்றனர்.
கே.சுந்தரலிங்கம் .