42 நாட்களேயான குழந்தைக்கு எமனான தாய்ப்பால் – யாழில் துயரம்!

0
203

யாழில் பிறந்து 42 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லைப்பிட்டி 2 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ராயதீபன் டேனுயன் என்ற பிறந்து 42 நாட்களேயான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தையை நேற்று (15) அதிகாலை பெற்றோர் பார்த்தபொழுது குழந்தையின் வாய், மூக்கில் இரத்தம் வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பிலான மரண விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here