அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் 16 ஓட்டங்களால் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 199 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் இவின் லிவிஸ் 79 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில், 200 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
இதற்கமைய, 5 போட்டிகளை கொண்ட இந்த தொடரை 4க்கு 1 என்ற அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.