50 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் நால்வர் கைது

0
24

அஹுங்கல்ல மற்றும் அம்பலாங்கொட ஆகிய பகுதிகளில் 50 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பொலிஸாரால் நேற்று (27) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்களிடம் இருந்து 13 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளும், 14 கிலோ கிராம் ஹெரோயினும் பறிமுதல் செய்யப்பட்டதாக தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்துள்ளார்

மேலும், இவர்களிடமிருந்து 09 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

அஹுங்கல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here