இந்திய அணிக்காக இதுவரை 115 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 4,008 ஓட்டங்களை பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி தனது 500 ஆவது சர்வதேச போட்டியில் விளையாடுகிறார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இன்று ஆரம்பமாகும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலமே கோலி இந்த பெருமையை பெறுகிறார்.
500ஆவது சர்வதேச போட்டியில் விளையாடும் வீரர்கள் பட்டியலில் பத்தாவது இடத்தில் கோலி உள்ளார் என்பதுடன் நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெறுகின்றார்.
இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கார் 664 போட்டிகளிலும், தோனி 538 போட்டிகளிலும்,ராகுல் டிராவிட் 509 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.
இதுவரை 110 டெஸ்ட், 274 ஒரு நாள் போட்டி மற்றும் 115 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
இந்திய அணிக்காக இதுவரை 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 8,555 ஓட்டங்களை பெற்றுள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் 254 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டமாக பதிவுசெய்துள்ளார். 274 ஒருநாள் போட்டிகளில் விளையாடி
12,898 ஓட்டங்களை பெற்றுள்ளார். இந்த ஒருநாள் போட்டிகளில் 183 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றுள்ளார். இதேவேளை இந்திய அணிக்காக இதுவரை 115 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 4,008 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இன்று நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி கோலியின் 500ஆவது சர்வதேச போட்டி மட்டுமன்றி, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே நடைபெறும் 100ஆவது போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.