56 வயதுடைய தாயை கொடூரமாக தாக்கிய மகன் ; வெளியான உண்மை

0
63

பொலன்னறுவை – திம்புலாகல, மனம்பிட்டிய மாகங்தொட கிராமத்தில் கொடூரமான முறையில் தாய் ஒருவரை மகன் தாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான கே.டி. ரம்யா ஸ்வர்ணலதா என்பவரே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இந் நிலையில் பொலிஸாரினால் குறித்த தாய் மனம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த 18ஆம் திகதி பாதிக்கப்பட்ட தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய குறித்த மகனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.தாயாரின் வளர்ப்பு நாய், மகன் வீட்டிற்கு சென்றமையால் ஏற்பட்ட வாக்குவாதமே தாக்குதலுக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஏற்கனவே மகனும் மருமகளும் குறித்த தாயை கொடூரமாக தாக்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here