6 மாவட்டங்களுக்கு பயணக்கட்டுப்பாடு? தொடல்பில் கலந்துரையாடல்.

0
186

கொழும்பு,கம்பஹா, கண்டி, களுத்துறை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு பயணக்கட்டுப்பாடு விதிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் பிரதானி பசில் ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் மிகவேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில் எதிர்வரும் நாட்களில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பிலும், சில மாவட்டங்களுக்கு பயணக்கப்பட்டுப்பாடு விதிப்பது எவ்வாறு என்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here