ஜூலை மாதத்தின் முதல் 6 நாட்களில் மட்டும் 36,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 120,446 ஆகும்.
ஜூலை மாதத்தின் முதல் 6 நாட்களில் இந்தியாவில் இருந்து 8,053 பயணிகள் வந்துள்ளதுடன் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,562 சுற்றுலாப் பயணிகள், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,674 பேர் மற்றும் சீனாவிலிருந்து 2,362 பேர் நாட்டிற்கு வந்துள்ளனர்.