கொழும்பு மற்றும் புறநகர் பகுதியில் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும்பாலான விபத்துக்கள் சாரதிகளின் கவனக்குறைவால் நடந்துள்ளதோடு, இவர்களில் பெரும்பாலானோர் மது அல்லது போதைப்பாருள் பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டது.
இனிமேல் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டும் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட முடியாது. அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு விசேட அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.
அந்த அனுமதிப்பத்திரம் இருந்தால் மட்டுமே பேருந்துகளை செலுத்த முடியும்.
மேலும் போதைப்பொருள் பாவனையிலிருந்து மீள விரும்பும் சாரதிகளுக்கு அரசாங்கத்தினால் உரிய சிகிச்சை வழங்கப்படும்.
அதேவேளை சட்டத்துக்கு எதிராக செயற்படும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.




