60 வயது அழகிக்கு 30வயது பழங்குடி இளைஞன் மீது தீரா காதல்~திருமணத்தில் முடிந்தது

0
233

பழங்குடி இனத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை திருமணம் செய்ய 60 வயது பெண் ஒருவர் செய்த விடயம் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் டெபோரா. இவருக்கு தற்போது 60 வயதாகிறது.இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, தனது மகளுடன் Tanzania நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கே உள்ள கடற்கரை ஒன்றில், அவர்கள் இருவரும் சென்று கொண்டிருந்த போது இரண்டு பழங்குடியின வாலிபர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது.

அதில் ஒருவர் தான் சைட்டோட்டி. இவருக்கு தற்போது 30 வயதாகிறது.

மேலும், அந்த பழங்குடி வாலிபர்களுடன் டெபோரா புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் பின்னர், சைடோட்டி என்ற வாலிபருடனும் அதிக நேரம் டெபோரா உரையாடி உள்ளார்.

அப்போது அவர்களுக்கு இடையே நிறைய ஒற்றுமையான விஷயங்கள் இருப்பதையும் இருவரும் உணர்ந்துள்ளனர்.

இதன் பின்னரும் அவர்கள் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, டெபோராவை திருமணம் செய்யவும் வாலிபரான சைட்டோட்டி விரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆனால், 60 வயதான டெபோரா, தனியாக வாழ்ந்து வந்த போதிலும் தன்னை விட 30 வயது குறைவான வாலிபரை மனக்கவும் முதலில் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, தனது மகன் மற்றும் மகளிடமும் இது பற்றி டெபோரா தெரிவித்துள்ளார். அவர்களும் இதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என சொல்லபடுகிறது. அப்படி இருக்கையில் இரண்டு மாதங்கள் கழித்து, மீண்டும் சைட்டோட்டி-ஐ சந்திக்க தான்சானியா கிளம்பிய டெபோரா, அவரது காதலையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து, கடந்த 2018 ஆம் ஆண்டு சைட்டோட்டி மற்றும் டெபோரா ஆகியோர், பழங்குடியின முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிலையில், சமீபத்தில் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தனது இளம் கணவருக்காக சுமார் 14,400 கிலோ மீட்டர் பயணம் செய்து தான்சானியாவிலும் டெபோரா வசித்து வருவதாக கூறப்படுறது இந்த தகவல் அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here