வொஷிங்டன் அருகே பயணிகள் விமானத்துடன் அமெரிக்க இராணுவ பிளாக்ஹாக் (H-60) ஹெலிகாப்டர் மோதியதாக இரண்டு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான விமானம் – PSA ஏர்லைன்ஸ் பொம்பார்டியர் CRJ700 – ஜெட் விமானம். அதில் 64 பயணிகள் பயணிக்க சொல்லப்படுகிறது.இந்த விமானம் அமெரிக்கன் எயர்லைன்ஸின் வணிகப் பயணத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு கன்சாஸிலிருந்து வொஷிங்டனுக்குச் சென்று கொண்டிருந்தது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வாஷிங்டன் டிசியில் ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதியதாக ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) தெரிவித்துள்ளது.
விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்தனர்
அந்நாட்டு நேரப்படி இரவு 9 மணியளவில் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் ஓடுபாதையை நெருங்கும் போது அமெரிக்க இராணுவ பிளாக்ஹாக் (H-60) ஹெலிகாப்டர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கு உள்ளான விமானம் ஆற்றுக்குள் விழுந்துள்ளது.அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சேத விபரங்கள் தொடர்பில் தகவல் இல்லை