அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 67 கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள 22 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இந்திய தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் இன்று முதல் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருவதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் சித்தாரா கமகே தெரிவித்தார்.
குறித்த உணர்வு பொருட்கள் இன்று இரண்டாம் திகதி ஹட்டன் புகையிரத நிலையத்தில் கொண்டுவந்த இறக்கியதும் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய நிவாரண பொருட்களை முதற்கட்டமாக இன்றைய தினம் அரிசி விநியோகிக்கப்பட்டன இந்த அரசி ஒரு குடும்பத்துக்கு 10 கிலோ கிராம் வீதம் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வறுமையான குடும்பங்களுக்கும் பெற்றுக்கொடுக்க உள்ளதாகவும் இதில் 35 தோட்டப்புறங்களைச் சேர்ந்த கிராமசேவகர் பிரிவுகளிலும் 22 வறிய குடும்பங்கள் உள்ள கிராம சேவகர் பிரிவிலும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் இந்த நிவாரண பொருட்கள் பெற்றுக் கொடுப்பதில் எவ்வித அரசியல் தலையீடும் இருக்கவில்லை என்றும் இதனை மிகவும் நியாயமான முறையில் உரிய குடும்பங்களுக்கு பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாகவும் அடுத்தடுத்து வரும் நிவாரண பொருட்களை தொடர்ந்தும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
குறித்த நிவாரண பொருட்கள் சீல் வைக்கப்பட்ட புகையிரதப் பெட்டி ஒன்றில் கொண்டுவரப்பட்டு பிரதேச செயலாளரினால் சீல் உடைக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன், க.கிஷாந்தன்