முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பிறப்பு: மார்ச் 1, 1953,
மு. க. ஸ்டாலின் என்பவர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர். தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார். கலைஞர் மு. கருணாநிதியின் மகனான இவர் சட்டமன்ற அவை உறுப்பினராகவும், சென்னை மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் ஸ்டாலின் பொறுப்பு வகித்துள்ளார்.
இவர் ஒரே இரத்தம் (1988), மக்கள் ஆணையிட்டால் என இரண்டு திரைப்படங்களிலும், குறிஞ்சி மலர் மற்றும் சூரியா எனும் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார். ஸ்டாலின் துடுப்பாட்டம், கணினி விளையாட்டு, பூப்பந்தாட்டம், சதுரங்கம், கேரம் உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் கொண்டவர்.
கட்சியில் சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் என்று உயர்ந்தார் மு.க. ஸ்டாலின்.
2017 ஜனவரியில் திமுகவின் செயல் தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. 2018-இல் திமுக தலைவர் மு. கருணாநிதியின் மறைவிற்குப் பின் ஸ்டாலின் திமுகவின் தலைவரானார். 2019-இல் இவரது மகன் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணித் தலைவர் ஆனார்.
மு. க. ஸ்டாலின் தேசிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கீழ் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை உருவாக்கி, மாநிலத்தில் 2019 பொதுத் தேர்தலில் கூட்டணிக்கு தலைமை தாங்கினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 நாடாளுமன்ற இடங்களில் 39 இடங்களையும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 21 இல் 12 இடங்களையும் 52% வாக்குகளைப் பெற்று வென்றது. திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் இவர் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். தமிழகத்தின் முதலமைச்சராக முதன் முறையாக பதவியேற்க உள்ளார். அவருக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
– சோ. ஸ்ரீதரன்-