7 நாட்களாக காச்சலால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை உயிரிழப்பு!

0
166

யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட எட்டு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

கிளிநொச்சி கணேச புரம் பகுதியை சேர்ந்த எட்டு மாத ஆண் குழந்தைக்கு கடந்த 7 நாட்களாக காய்ச்சல் காணப்பட்டதுடன் , சளியும் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை ஞாயிற்றுக்கிழமை (16) உயிரிழந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here