82 வயதுடைய ஏழு பெண் பிள்ளைகளின் தந்தையொருவர், தம்மைப் பராமரிப்பதற்காக தனது மகள்கள் 200,000 ரூபாவைக் கோருவதாக நேற்று பாதுக்க பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனக்கு உதவுமாறு அவர் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்தார்.தன்னிடமிருந்த ஒரே காணியை விற்று, சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான மருத்துவச் செலவை செய்ததுடன், மீதி ரூ.400,000 அவரது இளைய மகளிடம் வழங்கப்பட்டது.
அப்போது, இளைய மகளும், கணவரும் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். அந்த வீட்டிலேயே, முறைப்பாடு செய்த தந்தையும், தாயும் தங்கியிருந்தனர்.
எனினும், சிறிது நாளில இளைய மகள் குடும்பம் அந்த வீட்டிலிருந்து வெளியேறிச் சென்று விட்டது.பொலிசார் அவரது மகள்களை வரவழைத்து, அவர்கள் அனைவரும் நன்றாக வாழ்கிறார்கள் என்பதைக் கண்டறிய புகார் மனுவை விசாரித்தனர்.
வயோதிப தந்தையை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை குறித்து அவர்களுக்கு விளக்கமளித்த பொலிஸ் பொறுப்பதிகாரி கபில சேனாநாயக்க, அவ்வாறு செய்ய மறுத்தால் நீதிமன்றத்தின் ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்..
இதனையடுத்து, பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் மகள்களில் ஒருவர் தனது தந்தையை கவனிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார்.




