நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சுனாமி எச்சரிக்கை மக்கள் வசிக்காத சிறு சிறு தீவு பகுதிகளில் விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் சேத விபரங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் தென்மேற்கு சின்ஜியாங் மாகாணத்தில் அமைந்துள்ள ஹோட்டனில் இருந்து 263 கி.மீ தென்-தெற்கு-கிழக்கே (15.03.2023) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியதுடன் சீனாவின் ஹோட்டான் பகுதியில் 17 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்மேற்கு ஜின்ஜியாங்கில் உள்ள ஒரு பெரிய சோலை நகரம் ஹோட்டன். இது மேற்கு சீனாவின் தன்னாட்சிப் பகுதியாகும்.