வத்துகஹமுல்ல பிரதேசத்தில் 70 வயதான மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கபட்டுள்ளதாக மரவில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த மூதாட்டி திருமணம் ஆகாதவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் நாத்தாண்டி, வத்துகஹமுல்ல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகப்படுத்தபட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
குறித்த பெண், வீட்டில் தனியாக இருக்கும்போது நேற்று (23) காலை 1.00 மணியளவில், வீட்டுக்கு வந்து தன்னை மிரட்டி துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேகநபர் யார் என்பதை அடையாளம் காண முடியாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குள்ளான வயோதிப பெண் மருத்துவ பரிசோதனைகளுக்காக மாரவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.