8 வயது சிறுவன் ஒருவனை கால்வாயில் வீசிய குற்றச்சாட்டில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பொல்கஹவெல- உடபொல பகுதியில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில், 54 வயதான உடபொல கிராம உத்தியோகத்தரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
கால்வாயில் யானை ஒன்று குளிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த, 8 வயது சிறுவனை குறித்த கிராம உத்தியோகத்தர் தூக்கி கால்வாய்க்குள் வீசியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, குறித்த சிறுவனின் எலும்பு முறிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் சிறுவனின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சம்பவத்தின்போது சந்தேக நபர் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.