8 கிலோ 220 கிராம் குஷ் போதைப்பொருளுடன் இரண்டு இந்திய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் நேற்று (02) இரவு விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர் ஒருவர் 04 கிலோ 112 கிராம் குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாகவும், மற்ற சந்தேக நபர் 04 கிலோ 108 கிராம் குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் 38 மற்றும் 47 வயதுடைய இந்தியர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.