87 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர் கைது

0
188

ஜேர்மனியில் 87 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜேர்மனியில் 61 வயதான நபர் ஒருவர் 4 மாகாணங்களில் உள்ள 3 வெவ்வேறு கொரோனா தடுப்பூசி நிலையங்களில் அடுத்தடுத்து தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த சுகாதார பணியாளர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக அவரை கைது செய்த பொலிஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் நாள் ஒன்றுக்கு 3 முறையும் இதுவரை 87 முறை அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பலரும் அதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்களுக்காக இவர் தடுப்பூசி போட்டுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here