லெதன்டி கார்பெக்ஸில் தோட்ட வெளிக்கள உத்தியோகத்தரை வெளியேற்ற கோரி வேலை நிறுத்த போராட்டம்

0
205

அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட லெதன்டி கார்பெக்ஸ் பிரிவூ தொழிலாளர்கள் வெளிகல உத்தியோகஸ்த்தரை இடமாற்றகோறி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

பொகவந்தலாவ பெறுந்தோட்ட கம்பணிக்கு சொந்தமான லெதன்டி குருப் கார்பெக்ஸ் பிரிவு தோட்ட தொழிலாளர்களே 09.10.2018.செவ்வாய்கிழமை காலை வேலை நிறுத்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

வெளிகள உத்தியோகஸ்த்தர் மன்மத லீலையில் ஈடுபட்டுவந்த சம்பவம் வெளியான நிலையில் குறித்த தோட்ட தொழிலாளர்கள் இன்றைய தினம் தொழிலுக்கு செல்லாமல் கவினயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்

குறித்த வெளிகள உத்தியோகத்தர் பெண்களிடத்தில் தகாத விதத்தில் நடந்து கொள்வதாகவும் இவ்வாறான அதிகாரியின் கிழ் பெண் தொழிலாளர்கள் தொழில் புரிவதில் பாரிய அச்சம் கொண்டுள்ள நிலையில் குறித்த வெளிகள உத்தியோகத்தரை
வெளியேற்றகோறியும் இவ்வாறான செயற்பாட்டினால் தோட்டத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்

வெளியிடத்து பெண் ஒருவரை குறித்த வெளிகள உத்தியோகத்தருக்கு வழங்கபட்ட விடுதியில் தங்கவைத்து மனமதலீலைகளில் ஈடுபட்டுவருவதாக தோட்ட தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியதுடன் கடந்த காலங்களிலும் தேயிலை மழைகளில்
தொழில் புரிந்த பெண் தொழிலாளர்களிடம் அனாகரிகமாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்தனர்

தோட்ட ஆலய முற்றலில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் போது தோட்டமுகாமையாளர் கயான் ஏலபொல நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் மு.இராமசந்திரன் ஆகியோர் வருகை தந்ததுடன் தொழிலாளர்களுடன் கலந்துரையாடபட்டு மேற்படி
உத்தியோகத்தரை உடனடியாக வெளியேற்றகோறி தொழிலாளர்கள் அனைவரும் கை எழுத்திட்ட மகஜர் ஒன்றும் கையளிக்கபட்டது

இதன் போது தொழிலாளர்களின் கோறிக்கையை எற்று கொண்ட முகாமையாளர் விரைவில் உறிய தீர்வினை பெற்றுகொடுப்பதாக அறிவித்ததை அடுத்து ஆரபாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.

 

நோட்டன் ராம், எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here