9 மாதங்களுக்குள் குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணிக்க நடவடிக்கை

0
184

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலத்தை 9 மாதங்களுக்குள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கமையவே இந்நடவடிக்கை எடுக்கப்படடுடள்ளதாகவும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தினூடாக ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய, அனைத்து வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து கிளை வீதிகள் மற்றும் உள்நுழைவு வீதிகளையும் அபிவிருத்தி செய்து அவற்றை பிரதான வீதி கட்டமைப்புடன் தொடர்புபடுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் சு.று.சு.பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டிற்குள் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் எனவும் கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகவுள்ள அனைத்து சந்திகளையும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here