90 கிட்ஸ்களை விட அறிவாற்றலில் பின் தங்கும் ஜென்சிக்கள்: ஆய்வில் வெளியான தகவல்!

0
41

80, 90களில் பிறந்த மில்லினியல்கள் விட ஜென்சி (Gen-Z) தலைமுறையினர் குறைவான ஐகியூ அளவையே பெற்றுள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற நரம்பியல் விஞ்ஞானி ஜாரெட் ஹோர்வத் நடத்திய ஆய்வில், முந்தைய தலைமுறையை விட புதிய தலைமுறையின் ஐகியூ அதிகமாக இருக்கும் என்ற பிளைன் விளைவு கோட்பாடு தலைகீழாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக பயன்பாடுகளால், ஆழமாகச் சிந்திக்கும் திறன் மற்றும் நீண்ட நேரம் கவனம் செலுத்தும் ஆற்றல் குறைந்துள்ளதே ஜென் சி தலைமுறையின் அறிவுத்திறன் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது. அறிவுத்திறன் மட்டுமின்றி ஜென்சி தலைமுறையினர் பழக்க வழக்கங்களிலும் மில்லினியல்களை விட மாறுபட்டுள்ளார்களாம். இதில் ஆரோக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், மதுப்பழக்கத்தில் முந்தைய தலைமுறையினரைவிட ஜென்சிக்கள் ஆர்வம் குறைவானவராக உள்ளார்கள். 2000-களில் 72 சதவீதமாக இருந்தது தற்போது 62 சதவீதமாக குறைந்துள்ளதாம்.

dailythanthi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here