நீரில் மூழ்கி பலியாகிய பாடசாலை சிறுவன் மீட்பு- புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவில் சம்பவம்

0
233

புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரட்டைபாதையில் மகாவலி கங்கைளின் கிளை ஆறான செல்வகந்த ஆற்றிற்கு தனது 05 நண்பர்களுடன் குழிக்க சென்ற 18 வயதுடைய ஜே.கஜனேஸ்வரன் என்ற மாணவன் நீரில் மூழ்கி பலியாகி உள்ளார். இன்று காலை 09.00 மணியவில் (01.12.2018) கடற்படை சுழியோடிகள் மூலம் இவரது சடல் மீட்கபட்டு கம்பனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கபட்டு விசாரனைகள் மேற்க் கொள்ளபட்டு வருகின்றன.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நேற்றய தினம் (30.11.2018) மாலை 3.00 மணியளவில் நண்பர்களுடன் இவர் குறித்த இடத்திற்கு குழிக்க சென்றுள்ளார். இதன் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கண்டி பேராதெனிய கன்னொருவ ரணபிம ரோயல் கல்லூரியில் உயர்தர (2019) வர்த்தக பிரிவில் கல்வி பயின்று வந்த இவர் கம்பளை நகரத்தில் வசிப்பிடமாக கொண்டவராவார்.

நேற்றைய தினம் (30.11.2018) பாடசாலை விடுமுறை நாட்களாக இருந்த போதும் இந்த மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாது பெற்றோர்களுக்கு தெரியாமல் குழிக்கச் சென்றுள்ளனர். நீச்சல் தெரியாத இவர்கள் நீர் ஓடைகளில் குளிக்கும் போது வீபத்துக்கள் ஏற்படும் சந்தர்பத்தில் தங்களையும் பாதிப்புக்கு உள்ளானவர்களையும் காபாற்றும் உக்திகளை தெரிந்து இருக்கவில்லை இருந்தும் சக மாணவர்கள் இவரை காப்பாற்ற பல முயற்சிகள் மேற்க் கொள்ளபட்ட போதும் அவை பயன் அளிக்கவில்லை. பின்னர் பொலிஸ் உட்பட அயலவர்களின் முயற்சியில் மீட்பு பனிகள் மேற்க் கொள்ளபட்ட போதும் சடலம் கிடைக்காததினால். கடற்படையின் உதவிகள் நாடபட்டு சடலம் மீட்க்கபட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் நாளாந்தம் நடந்து வருகின்றது இதில் இருந்து மாணவர்களை காபாற்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அது மட்டுமல்லாது மாணவர்களின் நடவடிக்கைகளினால் தற்போது நாட்டில் நாளாந்தம் மாணவர்களின் இழப்புகள் அதிகரித்து வருகின்றது. இதற்கு இந்த நாட்டின் பொருப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மாணவ சமூதாயத்தை காபாற்றுமாறும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Image may contain: 1 person, outdoor, water and nature

Image may contain: 5 people, people standing and outdoorImage may contain: 4 people, people smiling, outdoor

பெற்றோர்களுக்கும் பாடசாலைக்கும் தெரியாமல் நடக்கும் இவ்விதமான அனர்தங்கள் குறித்து ஏனைய மாணவர்கள் கவனமாக சிந்தித்து செயற்பட வேண்டியது கட்டாயமானதாகும். இவ்வாறான அனர்தங்களினால் பெற்றெடுத்த பெற்றோர்களின் பறிதவிக்கும் நிலை அனைவரையும் ஒரு கனம் கண்ணீர் விட்டு அழ வைக்கின்றது. அது மட்டுமல்லாது கேள்விபடும் ஒவவொருவரினது மனங்களிலும் கவலையை ஏற்படுத்துகின்றது.

Image may contain: one or more people and shoes

இன்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் அபிவிருத்தி தொடர்பிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வாறான நிலையில் இந்த சம்பவம் துரதிஷ்டமானதே. எனவே மாணவர்களே சிந்தித்து செயற்படுகள் பெற்றோர்களின் கஷ்டத்தை புரிந்து செயற்படுங்கள். இவ்வாறான சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க கவனமாக நடந்துக் கொள்ளுங்கள். அதுவே மாணவ சமூதாய வளர்சிக்கு வழிகாட்டியாக இருக்கும். இந்த மாணவனை பிரிந்து ஆழ்ந்த துக்கத்தில் இருக்கும் பெற்றோருக்கும் குடுபத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

நன்றி பாலகிருஷ்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here