க.பொ.த சாதாரணதர பரீட்சையின் வினாத்தாள் திருத்தும் பணியில் சர்ச்சைக்குரிய ஆசிரியை!

0
183

க.பொ.சா.தர.பரீட்சையின் வினாத்தாள் திருத்தும் பணியில் சிங்கள பரீட்சை எழுதிய ஆசிரியை ஒருவரை ஹட்டன் பொஸ்க்கோ கல்லூரிக்கு ஈடுபடுத்தபட்டடை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் பரீட்சை திணைக்களத்தில் முறைபாடு

2018ம் ஆண்டு இடம் பெற்ற க.பொ.சா.தர பரீட்சையின் வினாதாள் திருத்தும் பணி ஆரம்பிக்கபட்டுள்ள நிலையில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் பொஸ்கோ கல்லூரியின் பரீட்சை எழுதிய ஆசிரியை ஒருவர் பணிக்கு ஈடுபடுத்தபட்டுள்ளதாகவும் குறித்த ஆசிரியை இம்முறை பரீட்சைக்கு தோற்றுவித்துள்ளமை தொடர்பில் மலையக ஆசிரியர் ஒன்றியம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப்ஸ்டாலிங் அவர்களிடம் முறைபாடு ஒன்றினை பதிவு செய்யபட்டமை தொடர்பில்
இலங்கை ஆசியரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப்ஸ்டாலிங்க பரீட்சை திணைக்களத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப்ஸ்டாலிங் தெரிவித்தார்

டிசம்பர் மாதம் இடம் பெற்ற பரீட்சையின் போது அட்டன் ஸ்ரீபாத கல்லூரியில் சிங்கள பரீட்சைக்கு தோற்று வித்த ஆசிரயர் ஒருவர் அட்டன் பொஸ்கோ கல்லூரியில் இடம்பெறும் வினாதாள் திருத்தும் பணிக்கு அட்டன் வலயகல்வி
பணிப்பாளர் ஊடாக அனுமதி வழங்கபட்டிருப்பதாக குறித்த முறைபாட்டில் தெரிவிக்கபட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் மேலும் தெரிவித்தார்

பரீட்சை ஒன்றுக்கும் தோற்றும் உறவினர்கள் யாராவது ஒருவர் இருப்பார்கள் ஆனால் அவர்களின் உறவினர்களோ அல்லது பரீட்சை எழுதிய நபர்களோ வினாதாள் திருத்தும் பணிக்கு ஈடுபடுத்த முடியாது என்பது பொதுவான சட்டம் ஆனால்
இம்முறை வினாதாள் திருத்தும் பணிக்கு ஈடுபடுத்த பட்டுள்ள ஆசிரியை பரீட்சைக்கு தோற்றிவர் என எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது இதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்க வேண்டும் ஹட்டன் வலயகல்வி பணிமணையும் குறித்த
கல்லூரியின் அதிபரும் இதற்கு உடந்தையாக செயற்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்

இதுபோன்ற தவறுகள் இடம் பெறுமானால் குறித்த கல்விவலயத்தின் பணிப்பாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும் இது யார் எப்படி பட்டவர் பரீட்சை வினாத்தாள் திருத்துபவர்கள் என்று பரீட்சை திணைக்களத்திற்கு தெரியாது ஆனால் இலங்கை
ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் என்றரீதியில் வினாதாள் திருத்துவதற்கு ஈடுபடுத்த பட்டிருக்கும் குறித்த நபரை உடனடியாக நீக்குமாறு நாங்கள் பரீட்சை திணைக்களத்திடம் கோரியுள்ளோதோடு குறித்த வினாதாள் திருத்தும்
நிலையத்திற்கு இவரை நியமித்த ஹட்டன் வலயகல்வி பணிமணையின் அதிகாரிகளுக்கும் எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கபட வேண்டும் எனவும் நாங்கள் கோரியுள்ளோம்

எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது குறித்த சம்பவம் தொடர்பில் பரீட்சை திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ளும் என நம்புகிறோம் அதேபோன்று இது போன்ற விடயங்களில் ஹட்டன் கல்வி வலயம் பிரசித்தி பெற்றது எனவும் அவர்
குறிப்பிட்டார்.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here