நுவரெலியா சதொச நிறுவனத்தை உடைத்து பொருட்களை களவாடிய மூவர் கைது

0
176

கடந்த காலங்களில் நுவரெலியா நகர வர்த்தக நிலையகள் கள்வர்களின் உடைத்து களவாடப்பட்டதை அனைவரும் அறிந்ததே.
அவ்வகையில் நுவரெலியா சதொச நிறுவனத்தை உடைத்து களவாடப்பட்ட பொருட்களுடன் 23.12.2018ம் திகதி இரவு
12.00 மணிக்கு மூன்று சந்தேக நபர்கள் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசாரணையின்போது பொருட்களின் பெறுமதி சுமார் ரூபா 70000 எனவும் சந்தேகநபரில் ஒருவர் சதொச நிறுவனத்தில் தொழில் புரிபவர் என்றும் இணங்காணப்பட்டுள்ளார். மேலும் இவர்கள் திருடிய பொருட்களை முச்சக்கரவண்டியின் மூலமே கொண்டு செல்ல முயற்சித்தபோதே நுவரெலியா மாகாஸ்தோட்ட பகுதியில் வைத்தே
நுவரெலியா பொலிஸாரின் திடீர் தேடுதலின்போது அகப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் கெப்பிட்டிபொல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நுவரெலியா பொலிஸ் பொறுப்பதிகாரி சந்தன பஸ்நாயக்க அவர்களின் பணிப்புரையின் கீழ் நுவரெலியா பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த மற்றும் சம்பத் ஆகியோர் உட்பட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது சதொச நிறுவனத்தின் களவாடப்பட்ட பொருட்களின் பெறுமதியை சதொச நிறுவனம் இன்னும்
அறிவிக்கவில்லை எனவும் மேலும் சில பொருட்கள் வேறு வாகனங்களில் கொண்டு சென்றிருக்கலாம் என
பொலிஸார் சந்தேகபடுகின்றனர்.

 

டீ. சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here