பெருந்தோட்ட தொழிலாளர் அடிப்படை வேதனம் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி பி ரட்நாயக்க தெரிவித்தார் நாட்டின் தற்போதை அரசியல் நிலை தொடர்பில் 07.01.2019 அட்டனில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மத்திய வங்கி கொள்ளையர்களின் தற்போதைய அட்சி தொடர்பில் மக்களின் கருத்தை தெரிந்து கொள்ள எந்த நேரத்திலும்ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனயும் தயாராக இருக்கின்றது.
முன்னால் பிரதமர் மஹிந்த ராஜக்ஷவின் 55 நாள் ஆட்சி காலத்தில்பெருந்தோட்ட தொழிலாளர் அடிப்படை சம்பளம்தொடர்பில் பலசுற்று பேச்சு வார்த்தைகள் நடந்து இறுதி கட்டத்தை அடைந்த நிலையில் 900 ருபா அடிப்படை சம்பளம் வரையில் இனைக்கப்பாடுகள் எட்டப்பட்டு இருந்தது அத்தோடு எரிவாயு, எரிபொருளின் விலைகள் குறைக்கப்பட்டதை மக்கள் அறிவார்கள் இந் நிலையில் நீதி மன்ற தீர்ப்பின் படி அமைச்சர்களின் கையொப்பங்கள் செலுபடியற்றது என அறிவித்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது இந் நிலையில் மக்களின் கருத்தை அறிந்து கொள்ளபா.பாளுமன்ற தேர்தலை சந்திக்க நாம் தயாராக இருக்கின்றோம்.
அத்தோடு சில அமைச்சின் செயலாளர்கள் சுற்று நிருபத்திற்கு எதிர்மாறாக தொழில் தமக்கு தேவையானவர்களுக்கு தொழில் வழங்கி வருகின்றனர் இவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க தீமாணித்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா