ஒன்பதாம் திகதி நாடு முழுவதும் அரசுக்கெதிராக போராட்டத்தை முன்னெடுக்கதயாராகியுள்ள நிலையில் அப்போராட்டத்திற்கு ஆதரவு குரல் எழுப்பும் முகமாக கொட்டகலை வர்த்தக சங்கம் கொட்டகலை நகரை முழுமையாக முடக்கவும் போராட்டத்தை முன்னெடுக்கவும் ஏற்பாடுகளை செய்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம்,பொருட்களின் தட்டுபாடு என அனைத்தையும் முன்னிலைப்படுத்தி பொதுமக்கள் நாட்டின் அரசுக்கெதிராகவும் அரசாங்கத்திற்கெதிராகவும் போராட்டங்களை ஒன்பதாம் திகதி முன்னெடுக்க தயாராகி கொண்டிருக்கும் இவ்வேளையில் அப்போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் கொட்டக்கலையில் கடையடைப்பும் அதேபோல ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் முன்பதாக போராட்டமும் செய்வதற்கு கொட்டகலை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்