யாழ்.பல்கலைக்கழகில் இடைநிறுத்தப்பட்ட கலைப்பீட பரீட்சைகள் திங்கள் ஆரம்பம்!

0
166

யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட கலைப்பீட பரீட்சைகள் 25ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன் கல்விச் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ள அனைத்துப் பீடங்களும் விரைவாக ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

வரும் திங்கட்கிழமை கலைப்பீடம், முகாமைத்துவ வணிக பீடம் உள்ளிட்ட சில பீடங்களில் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியுமா என நேற்று பீடாதிபதிகளுடன் ஆராயப்பட்டதாகவும் இதற்கு மேலும் சில நாட்கள் பொறுத்திருந்து சுமூக நிலையொன்று ஏற்படுத்தப்பட்ட பின்னர் இப்பீடங்களின் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம் என பீடாதிபதிகள் தெரிவித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here