தமிழ் முற்போக்கு கூட்டனிக்கு கிடைத்த வெற்றியே தோட்டதொழிலாளர்களுக்கான 2500 ரூபாய் இடைக்கால கெடுப்பனவு.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி எமது மக்களின் பொருளாதார நெருக்கடியை உணர்ந்து பெற்றுக்கொடுத்த 2500 ரூபாயை வாங்க வேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உருப்பினர்கள் தோட்டம் தோட்டமாக சென்று கூறிவந்தனர்.
ஆனால், மக்கள் அவர்களின் கூற்றை நிராகரித்து 2500 ரூபாயை பெற்றுக்கொண்டனர் என மலையகபுதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் தெரிவித்தார்.
நோர்வூட் தொண்டமான் விளையாட்டு அரங்கில் பயனாளிகளுக்கான கூரைத்தகடுகள் வழங்கிவைத்து உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழ் முற்போக்கு கூட்டனியை உடைக்க சிலர் முயற்சி செய்கின்றார்கள்.
எமது கூட்டனியினூடாக மலையகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளோம்.
சிலர் கடந்த கலங்களில் அமைச்சர்களாக இருந்த போது எதுவும் செய்யாமல் தற்போது எம்மை விமர்சனம் செய்கின்றார்கள்.
5 ஆண்டுகளில் 50 ஆயிரம் தனி வீடுகளை கட்டுவேன். அதேபோல தமிழ் முற்போக்கு கூட்டனியிலூடாக பல்வேறு அபிவிருத்திகளை முன்னொடுக்கவுள்ளோம்.
ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுத்தருவதாக கூறிக்கொண்டிருத்ததவர்கள் உடனடியாக பெற்றுகொடுக்க வேண்டும்.
அத்தோடு எமது தமிழ் முற்போக்கு கூட்டனியை யாராளும் உடைக்கமுடியாது.
நான், மனோகனோசன் மற்றும் இராதாகிருஸ்ணன் அகிய மூவரூம் இணைந்து ஒற்றுமையாக மலையக அபிவிருத்தியை முன்னொடுப்போம் என்றார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்