மக்கள் வசம் இருக்கும் மிகப்பெரிய ஜனநாயக ஆயுதமே வாக்குரிமையாகும்!!

” மக்கள் வசம் இருக்கும் மிகப்பெரிய ஜனநாயக ஆயுதமே வாக்குரிமையாகும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு உங்களை ஆளப்போகின்றவர்களை தெரிவுசெய்யும் நாளே தேர்தலாகும். அவ்வாறு தெரிவுசெய்யப்படுபவர்கள் மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பவர்களாக இருக்கவேண்டும். அதற்கேற்றவகையில் மக்கள் நிச்சயம் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

” இலங்கையர்களுக்கு 1931 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது. இதன்படி இலங்கையின் முதலாவது அரசுப்பேரவைக்கான பொதுத்தேர்தல் 1931 ஜுன் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை நடைபெற்றுள்ளது.

1947 ஆம் ஆண்டுக்கு முன்னர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு, அவர் அங்கம் வகிக்கும் கட்சிக்கான நிறத்தின் அடிப்படையிலேயே வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.1947 ஆம் ஆண்டுதான் அரசியல் கட்சிகளுக்கும், சுயேட்சைக்குழுக்களுக்கும் தேர்தல் சின்னங்கள் வழங்கப்பட்டு, தொகுதிவாரி முறையில் வாக்களிப்பு இடம்பெற்றது.

எனினும், 1978 இல் தொகுதிவாரிமுறைமாறியது. விகிதாசார – விருப்புவாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றளவிலும் அந்தமுறையிலேயே தேர்தல் நடைபெற்றுவருகின்றது. இந்த விருப்பு வாக்குமுறைதான் சிக்கலுக்குரியது. வாக்குகளைப்பெறுவதற்காக என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவற்றை அரசியல்வாதிகள் செய்கின்றனர். இந்நிலைமை மாறவேண்டும்.

எமது மலையக சொந்தங்களுக்கு 1948 இல் வாக்குரிமை பறிக்கப்பட்டது, 1989 இலும் அதன்பின்னர் 2000 காலப்பகுதியிலுமே அந்த உரிமை மீளக்கிடைத்தது. எனவே, நாம் அனைவரும் கட்டாயம் வாக்குரிமையைப் பயன்படுத்தவேண்டும். அது நீங்கள் நிறைவேற்ற வேண்டிய மிக முக்கிய ஜனநாயக கடமையாகும்.

5 ஆம் திகதி காலைவேளையிலேயே சென்று வாக்களித்து விடுங்கள். வாக்களிக்கசெல்வதற்கு முன்னர் அடையாள அட்டை அல்லது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் உள்ளனவா என்பதை அவமதானித்துக்கொள்ளுங்கள்.

கட்டாயம் முகக்கவசம் அணியவும், வரிசையில் நிற்கும்போது சமூக இடைவெளியை பின்பற்றவும். பேனையொன்றையும் எடுத்துசெல்லவும். வாக்களிப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம்.” – என்றுள்ளது.

 312 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan