கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட பல தசாப்தங்களுக்கு மேல் ஆகும்- உலக சுகாதார அமைப்பு வருத்தம்
உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 84 லட்சத்தை கடந்துள்ள நிலையில், வைரஸ் பாதிப்பால் 6 லட்சத்து 96 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர்.உலகம் முழுவதும் ஒரு கோடியே 16 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய அதனோம் கூறியதாவது,கொரோனா குறித்த அறிவியல் பூர்வமான பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என தெரிவித்தார்.இதுவரை இல்லாத வேகத்தில் தடுப்பு மருந்தை கண்டுபிடித்தாலும், அந்த மருந்து அனைவருக்கும் சென்றடைய வெகு காலம் ஆகும்.
இந்தத் தொற்றுநோய் ஒரு நூற்றாண்டில் ஒரு முறை வரும் சுகாதார நெருக்கடி. இதன் விளைவுகள் பல தசாப்தங்களுக்கு உணரப்படும் என்றும், அதுவரை கொரோனாவோடு வாழ்ந்து கொண்டே அதனுடன் போராட வேண்டும் என்றும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
1,392 total views, 2 views today