
மலையகத்திற்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்று மாதத்திற்கு அதிகமான காலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மலையகத்திற்கான சில புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் உடரட மெனிகே மற்றும் தெனுவர மெனிகே ஆகிய புகையிரதங்கள் இன்று முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
பொடி மெனிகே புகையிரதம் கடந்த வாரம் முதல் பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புகையிரத பயணங்கள் இடம்பெறவுள்ளதுடன், இன்று காலை அதிகளவான மக்கள் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
398 total views, 2 views today